பங்கேற்க கலெக்டர் அழைப்பு அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், ஜூலை 19: அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வாரியம் உயரத்திய மாத ஓய்வூதியம் ரூ.2000 விரைந்து அமல்படுத்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்குவதோடு, அந்த தொகையை பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகைகால போனாஸ் ரூ.5 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்கு முன்பாக வழங்கிட வேண்டும்.

விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர்கள் சிற்றம்பலம், சந்தானம், மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டும் முழக்கமிட்டனர்.

The post பங்கேற்க கலெக்டர் அழைப்பு அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: