பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தில், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் கீழ் சிஓபி-28 மற்றும் ஜி-20 தலைமையேற்ற இந்தியா திட்டங்கள் குறித்தும், பல்வேறு உலகளாவிய பிரச்னைகளில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் அபுதாபி பயணம் குறித்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கூறுகையில், ‘இரு நாடுகளும் சிறப்பான உறவைப் பகிர்ந்து வருகின்றன.
பிரதமர் மோடியின் வருகையானது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வாய்ப்பாக அமையும்’ என்றார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, இரு தலைவர்களும் இதுவரை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளனர். பிரதமர் மோடி 2015ம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முதல் பிரதமர் மோடிதான். மேற்கு ஆசியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியாவின் முக்கிய ராஜதந்திர நாடாக விளங்குவதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்.
The post பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடித்து அமீரகம் சென்றார் பிரதமர் மோடி: இருநாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடு குறித்து பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
