கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞரின் மாட்சிக்கும் தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும் :கவிஞர் வைரமுத்து

சென்னை : மதுரையில் திறக்கப்பெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞரின் மாட்சிக்கும் தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில், 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உலகம் தரம் வாய்ந்த அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு குறித்து கவிதை பாணியில் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு..

மதுரையில் திறக்கப்பெறும்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞரின் மாட்சிக்கும்
தளபதியின் ஆட்சிக்கும்
வரலாற்று அடையாளமாகும்

தமிழச் சாதியை
அறிவுக் குடிமக்களாக்கி
இந்த ஏழு தளங்களும்
ஏழு கண்டங்களுக்கும்
இட்டுச்செல்க என்று
வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு கர்வப்படும்
காரணங்களுள்
இதுவும் ஒன்று

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞரின் மாட்சிக்கும் தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும் :கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Related Stories: