அடையாறு முதல் சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பு வரை நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: டீரீம் ரன்னர்ஸ் பவுன்டேசன் சார்பில் அரை மாரத்தான்-2023 அடையாறு-சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பு வரை நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: அடையாறு டீரீம் ரன்னர்ஸ் பவுன்டேசன் ஏற்பாடு செய்த அரை மாரத்தான்-2023, நாளை காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை 21.1 கி.மீ மற்றும் 10 கி.மீ ஓட்டம் பெசன்ட்நகர் ஆல்காட் நினைவு பள்ளியில் தொடங்கி சாஸ்திரி நகர், எம்.ஆர்.சி நகர் மற்றும் காமராஜர் சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பு வரை சென்று மீண்டும் ஆல்காட் பள்ளி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை, போக்குவரத்து காவல் துறையால் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். பெசன்ட்நகர் 2வது அவென்யூ, 3வது அவென்யூ- எம்.எல் பூங்கா நோக்கி வரும் அனைத்து வாகனங்கள் சாஸ்திரி நகர், பெசன்ட்நகர் டிப்போ அருகே திருப்பி விடப்படும். 7வது அவென்யூ சந்திப்பு வலது, எம்ஜி சாலை, எல்பி சாலை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடையலாம். அடையாறு சிக்னல், எம்.எல் பூங்கா வரும் அனைத்து பேருந்துகளும் எம்எல் பூங்காவில் திருப்பி விடப்படும். இடது, எல்பி சாலை சாஸ்திரி நகர் 1வது அவென்யூவில் திருப்பி விடப்படும். திரு.வி.க பாலத்தில் இருந்து டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சாந்தோம் ைஹ ரோடு, காமராஜர் சாலை, லைட் ஹவுஸ் வரை வரும் திசையில் போக்குவரத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

காந்தி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. ஆர்.கே.சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் காந்தி சிலையை நோக்கி அனுமதிக்கப்படாது மற்றும் வி.எம்.தெரு வழியாக ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கெமடம், சாலை வழியாக இலக்கை அடையலாம். மந்தைவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவர்கள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புரம், 2வது பிரதான சாலை, சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் வழியாக திருப்பி விடப்படும். ரிசர்வ் வங்கியின் வடக்குப் பகுதியிலிருந்து தொழிலாளர் சிலையை நோக்கி வரும் அனைத்து வெளிச் செல்லும் வாகனங்களும் போர் நினைவுச் சின்னம் கொடிமரம் சாலை, வாலாஜா முனை அண்ணா சாலை ஆகிய இடங்களில் திருப்பி விடப்படும். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் ைஹ ரோடு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படாது. தொழிலாளர் சிலையை நோக்கி வரும் வாகனங்கள் கட்டாயம் இடது புறமாக செல்ல அனுமதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அடையாறு முதல் சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பு வரை நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: