சித்தூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

*23 வண்டி பறிமுதல்

சித்தூர் : சித்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பைக் அதிக அதிகளவு திருடப்பட்டதாக காவல் நிலையங்களில் ஏராளமான புகார்கள் அளித்து வந்தனர். இதனை அடுத்து எஸ்பி ரிஷாந்த் உத்தரவின் பேரில் போலீசார் பைக்திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் சித்தூர் 2வது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதையாச்சாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சித்தூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்த இரு வாலிபர்கள் போலீசாரை கண்டவுன் பைக்கில் தப்பி ஓட முயன்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் திருப்பதி, மதனப்பள்ளி, பிலேர், கங்காதர நெல்லூர், பலமனேர், புங்கனூர், குப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் வெளியே இருக்கும் விலை உயர்ந்த பைக் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்து 23 திருட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடைய மதிப்பு ₹40 லட்சம் எனவும், மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சித்தூர் அடுத்த இருவாரம் பகுதியை சேர்ந்த பி.ஜெமினி(19), பி.பிரபு(19) என தெரியவந்தது. மேலும் பைக்திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்த இன்ஸ்பெக்டர் மதையாச்சாரி மற்றும் போலீசாருக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட்டது.

The post சித்தூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: