மயிலாடுதுறை கூட்டுறவு பண்டக சாலையில் குறைந்த விலையில் காய்கறிகள் இரவு 7 மணி வரை விற்பனை

 

மயிலாடுதுறை,ஜூலை14: மயிலாடுதுறை டவுன் நாராயணபிள்ளை தெருவில் இயங்கி வரும், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஆணைக்கிணங்க வெளிசந்தையில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பண்டகசாலையின் தலைமையகத்தில் மலிவு விலை காய்கறி பிரிவு கலெக்டர் துவக்கி வைத்தார்.

காய்கறி பிரிவில் கடை பூட்டப்பட்டு இருந்ததால் வியாபாரம் நிறுத்தப்பட்டதாக வெளிநபர்களால் திட்டமிட்டு செய்தி பரப்பப்பட்டுள்ளது. தக்காளி, வெங்காயம் மற்றும் இதர காய்கறிகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலை முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து வியாபாரம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், நுகர்வோர் ஆதரவு தருமாறும் பண்டகசாலையின் மேலாளர் ராஜேந்தின் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை கூட்டுறவு பண்டக சாலையில் குறைந்த விலையில் காய்கறிகள் இரவு 7 மணி வரை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: