சில்லிபாயிண்ட்…

* திருச்சியில் நடைபெறும் ஜூனியர் பேட்மின்டன் லீக் போட்டிகளை யுரோஸ்போர்ட் தொலைக்காட்சி தினமும் மாலை 4.45 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. போட்டியின் இறுதி நாளான ஜூலை 15ம் தேதி அனைத்து ஆட்டங்களையும் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

* இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் வீராங்கனைகள் அளிக்கும் புகார்களை விசாரிக்கும் பெண்கள் பாதுகாப்பு குழுவுக்கு 3 பெண்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், பவர்லிப்டிங் வீராங்கனையுமான டாக்டர் ஆர்த்தி அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

* அமெரிக்காவின் கவுன்சில் புளூஃப்ஸ் நகரில் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதன் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழக வீரர் சங்கர் முத்துசாமி முதல் சுற்றில் 21-17, 21-11 என தென் ஆப்ரிக்காவின் டாவி சில்வாவையும், 2வது சுற்றில் 21-11, 21-17 என கனடா வீரர் சங்கீர்த்தையும் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

* முதல்வர் கோப்பை பீச் வாலிபால் போட்டியின் ஆண்கள், மகளிர் பிரிவுகளில் மயிலாடுதுறை மாவட்டம் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது. ஆண்கள் பிரிவில் 2, 3வது இடங்களை சென்னை மாவட்ட அணிகள் கைப்பற்றின. மகளிர் பிரிவில் 2வது இடத்தை சென்னையும், 3வது இடத்தை சேலமும் வசப்படுத்தின.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Related Stories: