டிஎன்பிஎல் பைனலில் நெல்லைக்கு எதிராக கோவை கிங்ஸ் ரன் குவிப்பு

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. இந்தியா சிமென்ட் நிறுவன மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பேட் செய்தது. சுஜய் 7 ரன், பி.சச்சின் 12 ரன்னில் பெவிலியன் திரும்ப, சுரேஷ் குமார் – முகிலேஷ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது. சுரேஷ் குமார் 57 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சோனு யாதவ் பந்துவீச்சில் அருண் கார்த்திக் வசம் பிடிபட்டார். கேப்டன் ஷாருக் கான் 7 ரன்னில் வெளியேற, முகிலேஷ் – அதீக் உர் ரகுமான் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர்.

அதிரடியாக விளையாடிய அதீக் உர் ரகுமான் 50 ரன் எடுத்து (21 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். கோவை கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. முகிலேஷ் 51 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ராம் அர்விந்த் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சில் சோனு யாதவ், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட், மோகன் பிரசாத் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்கியது.

The post டிஎன்பிஎல் பைனலில் நெல்லைக்கு எதிராக கோவை கிங்ஸ் ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: