புகை பிடிப்பதை கண்டித்த விமான ஊழியர் மீது தாக்குதல்: நேபாள பயணி கைது

புதுடெல்லி: கனடாவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணியொருவர் ஊழியரை தாக்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. சமீப காலமாக, விமான நிறுவன ஊழியர்களை பயணிகள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘’டொரண்டோவில் இருந்து கடந்த 8ம் தேதி டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நேபாளத்தை சேர்ந்த பயணி தகாத முறையில் நடந்து கொண்டார்.

அவர் கழிவறையில் சிகரெட் புகைத்ததைக் கண்டித்த விமான ஊழியரைத் தாக்கியதுடன், கழிவறையின் கதவை உடைத்தும், ஊழியருக்கு ஆதரவாக பேசிய சில பயணிகளை தாக்கி அவர்களுக்கு சிறிய அளவிலான காயங்களை ஏற்படுத்தினார். பல முறை எச்சரிக்கப்பட்ட பிறகு, இருக்கையில் அமர வைக்கப்பட்டார். விமானம் டெல்லி வந்தடைந்ததும் ஊழியரை தாக்கிய பயணி பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து விமான ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

The post புகை பிடிப்பதை கண்டித்த விமான ஊழியர் மீது தாக்குதல்: நேபாள பயணி கைது appeared first on Dinakaran.

Related Stories: