தண்டிக்கப்பட தகுதியானவர் பிரிஜ் பூஷண்… வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை: டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என்று டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் மற்றும் இதர வீராங்கனைகள் நடத்தி வந்த போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், பிரிஜ் பூஷண் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் கூட அவர் மீது கைது நடவடிக்கை பாயவில்லை. இதற்கிடையே ஜூன் 13-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷணுக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

17 வயது சிறுமி உள்ளிட்ட 6 வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷண் சிங் தொடர்ச்சியாக அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்து வந்தார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. வீராங்கனைகளை சட்ட விரோதமாக பின் தொடர்ந்து வேவுபார்த்தார் என்றும், அவர்களது கண்ணியத்தை குலைக்கும் வகையில் தாக்கினார் என்று கூறப்பட்டுள்ளது. இதை 15 சாட்சியங்கள் உறுதிப்படுத்துவதால் பிரிஜ் பூஷண் சட்ட நடவடிக்கைக்கு தகுதியானவர் என்று தண்டிக்கப்பட தகுதியானவர் எனவும் டெல்லி காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

The post தண்டிக்கப்பட தகுதியானவர் பிரிஜ் பூஷண்… வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை: டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: