தமிழகத்தில் நாளை அழகுமுத்துகோன் குருபூஜை விழா கொண்டாடுங்கள்: நாசே ராமச்சந்திரன் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோனின் 266ம் ஆண்டு குருபூஜை விழா நாளை (11ம் தேதி) தமிழகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: யாதவ சமுதாயத்தின் அடையாளமான முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோனின் 266ம் ஆண்டு குருபூஜை விழா சென்னையில் அரசு விழாவாகவும், செங்கல்பட்டு அருகே காட்டாங்கொளத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அந்தந்த மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய, நகர பகுதிகளில் மாவீரன் அழகுமுத்துகோனின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இதில், யாதவ சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களும் பெருந்திரளாக பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post தமிழகத்தில் நாளை அழகுமுத்துகோன் குருபூஜை விழா கொண்டாடுங்கள்: நாசே ராமச்சந்திரன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: