திருத்துறைப்பூண்டி அடுத்த மடப்புரம் புனித அந்தோனியார் திருத்தள திருவிழா

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் கிராமத்தில் உள்ள புனித அந்தோனியார் திருத்தள திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் மாலை நவனால் ஜெபம் மற்றும் திருப்பலி நடைபெற்று 8ம் தேதி சனிக்கிழமை பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், உதவி தந்தை பீட்டர் டேமியான் துரைராஜ் மற்றும் பள்ளங்கோயில் பள்ளி அருட்தந்தை அருள் அமிர்தராஜ் ஆகியோர்களால் இணைந்து கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரவு புனித அந்தோணியார் சுரூபம் தாங்கிய திருத்தேரானது மடப்புரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் அனைவருக்கும் ஆசி வழங்கி வளம் வந்தது. அதனை தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று காலை திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது. விழாவில் கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மடப்புரம் கிராமத்திலிருந்து வெளியூர் சென்று வேலை பார்ப்பவர்களும் திருமணமாகி சென்றவர்களும் என கிராமத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் அவரவர் சொந்த ஊருக்கு திருவிழா கொண்டாட வந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

The post திருத்துறைப்பூண்டி அடுத்த மடப்புரம் புனித அந்தோனியார் திருத்தள திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: