சென்னையில் நடைபெற்ற வேளாண் வணிகத்திருவிழாவில் பெரம்பலூர் மாவட்ட அரங்கு இடம் பெற்றது

பெரம்பலூர், ஜூலை 9: சென்னையில் நடைபெற்ற வேளாண் வணிகத்திருவிழாவில் பெரம்பலூர் மாவட்ட அரங்கும் இடம் பெற்றது. பாரம்பரிய அரிசி ரகங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள், கால்நடைத்தீவனங்கள் விற்பனை. பெரம்பலூர் மாவட்ட வேளாண் வணிகத்துறையினரோடு 60 விவசாயிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் வேளாண் வணிகத்திருவிழா- 2023 நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகளை கொண்ட இந்த வேளாண் வணிகத்திருவிழாவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழகத்தின் புகழ் பெற்ற இந்த வேளாண் வணிகத்திருவிழாவில் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக, 126- வெப்சா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் – பெரம்பலூர் என்ற பெயரில் அர ங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய இரகங்களான கருப்பு கவுனி, சீரக சம்பா, பூங்கார், கொத்தமல்லி சம்பா, இரத்தசாலி உள்ளிட்ட அரிசி ரகங்கள், பாதுகாக்கப்பட்ட பாக்கெட்டுகளில் கிலோ ரூபாய் 300க்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் பாரம்பரிய அரிசி ரகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள், மேலும் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள், கால்நடை தீவனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்தன. இந்த பாரம்பரியமிக்க அரிசி ரகங்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் பெரம்பலூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட, சொக்கநாதபுரம் வெளிப்புற சாலையில் உள்ள வெப்சா வேளாண் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிட த்தக்கது.

இவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து வந்த விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். இந்த அரங்குகளில் பெரம்பலூர் மாவட்டவேளாண்மை துணை இயக்குனர் (வேளா ண் வணிகம்) கண்ணன் தலைமையில், வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) நாகராஜன், உதவி வேளாண் அலுவலர்கள் (வேளாண் வணிகம்) வீரசிங்கம், மாரிதேவன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரங்கில் பணியாற்றினர். அரங்கினை தமிழ்நாடு வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு சிறு குறு மற்றும் தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்ப ரசன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த வேளாண் வணிக திருவிழா நிகழ்ச்சியை காண, பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்ட வேளாண் மை (வேளாண் வணிகம்) துறை சார்பாக 60 விவசாயிகள் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர். இந்த வேளாண் வணிகத்திருவிழா இன்றும் நடைபெறவுள்ளது.

The post சென்னையில் நடைபெற்ற வேளாண் வணிகத்திருவிழாவில் பெரம்பலூர் மாவட்ட அரங்கு இடம் பெற்றது appeared first on Dinakaran.

Related Stories: