வீடு வீடாக போடப்பட்டிருந்த குடிநீர் குழாயில் 50க்கும் மேற்பட்ட பித்தளை பைப்புகள் திருட்டு

திட்டக்குடி, ஜூலை 9: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கோடங்குடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வீடு, வீடாக குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தண்ணீர் குழாயில் இருந்த பித்தளை பைப்புகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது பைப் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழாய் பைப்பில் இருந்த டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியில் செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் வீடு, வீடாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயில் திருடு போன அனைத்து தண்ணீர் குழாயிலும் பைப் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பிடிக்கும் தண்ணீர் குழாயில் மர்ம நபர்கள் பித்தளை பைப்பினை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post வீடு வீடாக போடப்பட்டிருந்த குடிநீர் குழாயில் 50க்கும் மேற்பட்ட பித்தளை பைப்புகள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: