வணிக வரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு முகாம்

சேலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் கோட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில், ஜிஎஸ்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூட்டத்துக்கு இணை ஆணையர் நாராயணன் தலைமை வகித்தார். துணை ஆணையர் (நிர்வாகம்) கார்த்திகேயன் வரவேற்றார். துணை ஆணையர் (செயலாக்கம்) சங்கநாராயணன் முன்னிலை வகித்தார். முகாமில் மாநில வரித்துறை இணை ஆணையர் (செயலாக்கம்) ஜெயராமன் பேசுகையில், ‘ஜிஎஸ்டி யார், யார் செலுத்த வேண்டும். ஏன் பதிவு செய்ய வேண்டும். இன்வாய்ஸ் பயன்பாடு, ரிட்டன் பெறுவது, இதனால் வணிகர்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து பேசினார். உதவி ஆணையர் வாசுகி, வியாபாரிகளுக்கான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். உதவி ஆணையர்கள் வேடியப்பன், செல்வி, அருண்குமார், பழனியம்மாள், சூர்யா மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், ஆடிட்டர்கள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை ஆணையர் நாராயணன் ஏற்புரை நிகழ்த்தினார்.

The post வணிக வரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: