மாம்பாக்கம் ஊராட்சி நடவடிக்கை தெருக்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் உள்ளன. இவை சாக்கடை கால்வாய்களை தோண்டியும், விவசாய நிலங்கள், வீட்டு மனைகளில் உள்ள செடிகள், பழமரங்கள், கிழங்கு வகை செடிகளையும் தோண்டி பாழ்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து தெருக்கிலும் சுற்றி திரிந்து வந்தன.

இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் பன்றிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிவுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வாகனங்களில் மாம்பாக்கம் ஊராட்சியில் ஆங்காங்கே சுற்றித்திரிந்த பன்றிகள் அனைத்தும் பிடிக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

The post மாம்பாக்கம் ஊராட்சி நடவடிக்கை தெருக்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: