ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேவர்சோலை, பி.மணிஹட்டி பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் திறப்பு

 

ஊட்டி,ஜூலை7: நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ரூ.22 லட்சம் செலவில் தேவர்சோலை மற்றும் பி.மணிஹட்டி பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 15வது மானிய நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட பி.மணியட்டியில் ரூ.22 லட்சம் மதிப்பிலும், தேவர்சோலையில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலா இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

விழாவில், மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். நீலகிரி எம்பி., ராசா கலந்துக் கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்கள் நலன்கருதி, அனைத்துத்துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகபடியான நிதியினை ஒதுக்கீடு செய்து மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகச்சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

The post ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேவர்சோலை, பி.மணிஹட்டி பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: