ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஜூலை 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நாளை (8ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனி பிரமோற்சவ விழா. தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி, கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில், காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர்.

அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அதைத்தொடந்து, விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சியளிப்பார்கள். ஆனி பிரசோற்சவ விழாவை முன்னிட்டு, தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: