சென்னை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக ஒன்றிய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குப் பிறகு, 2018-ல் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூர் சுமார் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யபட்டது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு சென்று வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1977 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.12.53 கோடி தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பாவர்;
5 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நிறைவுபெறும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்ட ஒன்றிய அரசு ரூ.2,145 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். கொரானாவின் போது தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புக்காக ஒன்றிய அரசு ரூ.900 கோடி வழங்கியதாகவும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.
The post 5 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நிறைவுபெறும்: ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் பேட்டி appeared first on Dinakaran.
