சரத்பவார் கட்சியை தொடர்ந்து நிதிஷ்குமார் கட்சியை உடைக்கிறது பா.ஜ?..பரபரப்பு தகவல்கள் அம்பலம்

புதுடெல்லி: சரத்பவார் கட்சியை உடைத்தது போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியை உடைக்க பா.ஜ திட்டமிட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. தேசியவாத காங்கிரசை தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை துண்டாட பா.ஜ முயற்சி செய்து வருகிறது. பீகாரில் 40 எம்பி தொகுதிகள் உள்ளன. இங்கு எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி விட்டால் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பா.ஜ கணக்குபோட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

பீகாரில் நிதிஷ்கட்சியை உடைப்பதை பீகார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ எம்பியுமான சுஷில்குமார் மோடி நேற்றுஉறுதிப்படுத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இப்போது கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் உள்ள பலர் பாஜவுடன் தொடர்பில் உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து எங்களுடன் வருவார்கள்.

இவர்கள் அனைவரும் நிதிஷ்குமாரின் வாரிசாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவரும், துணைமுதல்வருமான தேஜஸ்வியை ஏற்கவில்லை. மேலும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல்காந்தியை ஏற்கவில்லை. மகாராஷ்டிரா போன்று பீகாரிலும் அரசியல் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்றால், வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம். நிதிஷ்கட்சியில் எதுவும் நடக்காது என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது’ என்று தெரிவித்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சரத்பவார் கட்சியை தொடர்ந்து நிதிஷ்குமார் கட்சியை உடைக்கிறது பா.ஜ?..பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: