மெக்சிகோவில் உள்ள பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டாவுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மெக்சிகோ நகரத்தில் உள்ள பூங்காவில் ஜின்ஜின் என்ற பெண் பாண்டா பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் 33-வது பிறந்தநாளை பூங்கா நிர்வாகம் விமர்சியாக கொண்டாடியது. இதில் பாண்டா பிரியர்கள் பலர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பாண்டா ஜோடிக்கு பிறந்தது இந்த ஜின்ஜின் பாண்டா. பொதுவாக வனப்பகுதியில் உள்ள பாண்டாக்கள் மட்டுமே 30 வயதை தாண்டி உயிர் வாழும். எனவே பூங்காவின் சிறப்பான கவனிப்பால் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் இந்த பாண்டா மெக்சிகோ பெருமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
The post மெக்சிகோவில் உள்ள பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டாவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.
