கத்திப்பாரா சந்திப்பு அருகே 6.8 ஏக்கரில் பசுமை பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு

சென்னை: கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே 6.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் பசுமை பூங்கா, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே 6.8 ஏக்கர் பரப்பளவில், ரூ.35 கோடி மதிப்பில் பசுமைப் பூங்காவை அமைத்துள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அகலமான நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

பூங்கா முழுவதும் பசுமையான சூழல் இருக்கும் வகையில் பல்வேறு வகையான மரங்கள், மலர் செடிகள், புல்வெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.15 லட்சம் செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான வண்ணத்து பூச்சிகள் கொண்டு வந்து விடப்படுகிறது. பூங்காவிற்குள் கற்றல் நோக்கத்திற்காக போதுமான பல்வேறு தாவரங்கள் உள்ளன. தோட்டக்கலை கொண்ட இந்த பூங்கா விரைவில் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்காக திறக்கப்பட உள்ளது, என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post கத்திப்பாரா சந்திப்பு அருகே 6.8 ஏக்கரில் பசுமை பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: