மங்களூரு சந்திரகாஞ்ச் ரயில் இன்று ரத்து

சேலம்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹனகா பஜார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதிய விபத்தில், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணியை முடித்து, ரயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளனர். இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அப்பணியை தற்போது ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் சேவையை ரத்து செய்து, பணியை மேற்கொண்டுள்ளனர்.இந்தவகையில், மேற்குவங்க மாநிலம் சந்திரகாஞ்ச்-மங்களூரு விவேக் எக்ஸ்பிரஸ் (22851), நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக மறுமார்க்கத்தில் கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் மங்களூரு-சந்திரகாஞ்ச் விவேக் எக்ஸ்பிரஸ் (22852) இன்று (1ம் தேதி) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, அதன் கட்டணத்தை திரும்ப வழங்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

The post மங்களூரு சந்திரகாஞ்ச் ரயில் இன்று ரத்து appeared first on Dinakaran.

Related Stories: