காளியம்மன் கோயில் திருவிழாவில் எருமை கிடா பலியிட்டு சிறப்பு வழிபாடு

நிலக்கோட்டை: செம்பட்டி அருகே, ஆத்தூர் காளியம்மன் கோயில் திருவிழாவில் எருமை கிடா, பன்றிக்குட்டி பலியிட்டு சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெருவில் உள்ள சின்ன வண்டி காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, அன்றிரவு அக்கரைப்பட்டியில் இருந்து அம்மனை அலங்கரித்து, கோயிலுக்கு அழைத்து வந்தனர். 28ம் தேதி அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மாலையில் எருமை கிடா பன்றி குட்டி ஆகியவற்றை ஊர்வலமாக அழைத்து வந்து கோயில் முன்பு நிறுத்தினர்.

பின்னர், கோயில் பூசாரி பெருமாள் கையில் அரிவாளுடன் அருள் வந்து சாமியாடியபடி, எருமை கிடா, பன்றிக்குட்டி மற்றும் சேவல் ஆகியவற்றை பக்தர்கள் முன்னிலையில் வெட்டி பலியிட்டார். பின்னர் அவற்றின் உடல்களை புதைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். எருமை கிடா, பன்றி கிடா மற்றும் சேவலை வெட்டியவுடன் அந்த குழியில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, உப்பை கொட்டினர். இதனையடுத்து அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலைக்கு சென்றடைந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆத்தூர், நந்தனார் தெரு மற்றும் சுற்றுப்பகுதிகள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்ததனர்.

The post காளியம்மன் கோயில் திருவிழாவில் எருமை கிடா பலியிட்டு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: