நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 61 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன் எடுத்துள்ளது. ஹாரி புரூக் 45, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்னும் 138 ரன்பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இன்று 3வது நாளில் தொடர்ந்து பேட் செய்கிறது. இதனிடையே நேற்று பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த போது நாதன் லயன் காலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். அவர் இன்று பந்துவீசுவாரா என்பது தெரியவில்லை. லயன் காயம் ஆஸி.க்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆஷஸ் 2வது டெஸ்ட்: நாதன் லயன் காயம் ஆஸி.க்கு பின்னடைவு appeared first on Dinakaran.