இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரம்மிப்பூட்டும் பலூன் கண்காட்சி: உலகின் மிக மூத்த பெண் கைவினைக் கலைஞர் யாயோயி அசத்தல்

ஜப்பான்: உலகின் மிகவும் மூத்த பெண் கைவினை கலைஞரான ஜப்பானின் யாயோயி குஸாமாவின் பிரமிப்பூட்டும் பலூன்கண்காட்சி இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கானோரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில்தொடங்கியுள்ள இந்த பலூன் கண்காட்சியில் யாயோயி குஸாமாவின் கற்பனை வளத்தில் உருவான பிரமாண்டமான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காற்றடைத்த பிரம்மாண்டங்களாக காட்சி தரும் பூசணிக்காய், இளம்பெண் உருவம் நாய் வடிவிலான பலூன்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த கண்காட்சிக்கு நீ, நான் மற்றும் இந்த பலூன்கள் என்று இவற்றை உருவாக்கிய யாயோயி குஸாமா தலைப்பு வைத்திருக்கிறார்.

94வயதாகும் யாயோயி குஸாமா மட்டுமே அதிக கட்டணம் பெறுகின்ற மற்றும் மிகவும் மூத்த கைவினை கலைஞர் ஆவார். 10 மீட்டருக்கு அதிகமான உயரம் கொண்ட இந்த பலூன் பொம்மைகள் கண்காட்சி மான்செஸ்டர் நகரில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 28ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். இந்த ராட்சச பொம்மைகளுக்கு நடுவில் இருக்கும் போது காற்றடைத்த கனவு உலகத்தின் மத்தியில் நிற்பது போன்று உணர்வு இருப்பதாக பார்வையாளர்கள் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.

The post இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரம்மிப்பூட்டும் பலூன் கண்காட்சி: உலகின் மிக மூத்த பெண் கைவினைக் கலைஞர் யாயோயி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: