ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 27 பயனாளிகளுக்கு ரூ.24.59 லட்சத்தில் சுழல் நிதி கடன் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

ராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.காவனூர் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையேற்று சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசுகையில், கால்நடைகளுக்கான இந்த சிறப்பு முகாமின் நோக்கம். கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவசிகிச்சை வழங்கி கால்நடைகளை நல்ல முறையில் பாதுகாத்திட வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் இந்த சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இந்த முகாம் மூலம் 90 ஆயிரம் கால்நடைகள் மற்றும் 7 லட்சம் ஆடுகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கால்நடை வளர்ப்போருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுழல் நிதி கடன் மற்றும் பொருளாதார கடன் வழங்கப்படுகிறது. மேலும் ஆவின் நிர்வாகம் மூலம் பால் உற்பத்தியாளர் சங்கத்திலிருந்து பால் முழுவதும் கொள்முதல் செய்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து 27 பயனாளிகளுக்கு ரூ.24.59 லட்சத்தில் சுழல் நிதி கடன்களுக்கான ஆணையினை வழங்கி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி புதிதாக பதிவு செய்யப்பட்ட தளிர்மருங்கூர் மகளிர்குழு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், புதுக்குடி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.மோகன் , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ஆவின் நிர்வாக துணைப்பதிவாளர் புஷ்பலதா, ஊராட்சி மன்றத்தலைவர் கமலா ராமதாஸ் , கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.ராதாகிருஷ்ணன், ஆவின் நிர்வாக கண்காணிப்பு அலுவலர் அண்ணாமலை , கால்நடை மருத்துவ அலுவலர்கள் மரு.நேருகுமார், மரு.சாரதா, மரு.டாபினி, மரு.ரஜினி, மரு.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 27 பயனாளிகளுக்கு ரூ.24.59 லட்சத்தில் சுழல் நிதி கடன் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: