வேதாரண்யம் கோயில் கும்பாபிஷே விழாவில் சேர்ந்த 2 டன் குப்பைகளை அகற்றிய ஆசிரியர்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் கும்பாபிஷேகம் நடந்த கோயில் வளாகத்தில் சிதறி கிடந்த குப்பைளை முத்த குடிமக்கள் பேரவையின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தூய்மை பணி செய்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது. நாக்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வனதுர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விட்டுச் சென்ற காலணிகள், தண்ணீர் பாட்டில்கள், காகித தட்டுக்கள், காகித குவளைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பை, சிதறிக்கிடந்தன.

இதையடுத்து இரவு அந்த பகுதிக்கு வந்த மூத்த குடிமக்கள் பேரவை உறுப்பினரான சமூக ஆர்வலர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு (61) விடிவதற்குள் சிதறி கிடந்த குப்பைகளை அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து எடுத்து அன்னக்கூடைகள், தூய்மை கருவிகளை எடுத்து வந்து அதிகாலையில் கோயில் உட்பிரகாரத்தை முதல் வெளிபுறத்திலும் குப்பை பொருட்களை அள்ளினார். அப்போது அங்கு வந்த அப்பகுதி பக்தர்கள் பலரும் சேர்ந்து குப்பைகளை தனித்தனியாக தரம் வாரியாக சேகரித்து கோயிலுக்கு வெளியே இரண்டு இடங்களில் குவித்தனர். பின்னர் இந்த தூய்மை பணி குறித்து அறிந்த நகரமன்ற தலைவர் புகழேந்தி நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்ளிட்ட நகராட்சி சுகாதார கண்காணிப்பாளர் ராஜா, முருகேசன் உட்பட 12 தூய்மைப்பணியாளர்கள் 10 பேர் டிராக்டர், லாரியுடன் வந்து சுமார் இரண்டு டன் குப்பைகளை அகற்றி தூய்மை செய்து சுற்றுப்புறங்களில் சுகாதார பணிகளையும் செய்தனர். இந்த பணிகளை கண்ட பொதுமக்களும், பக்தர்களும் ஆசிரியர் சித்திரவேலு உட்பட குழுவினரை பாராட்டினர்.

The post வேதாரண்யம் கோயில் கும்பாபிஷே விழாவில் சேர்ந்த 2 டன் குப்பைகளை அகற்றிய ஆசிரியர் appeared first on Dinakaran.

Related Stories: