மக்களை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி: பொது சிவில் சட்டம் குறித்து கே.சி.வேணுகோபால் விமர்சனம்..!

டெல்லி: நாட்டில் நிலவும் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் முதலில் பதில் சொல்ல வேண்டும் என கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார். பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் தங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என்று போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும் கூறுகிறது. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக அதை சிலர் எதிர்க்கின்றனர். எந்த கட்சி எதிர்வினை தூண்டுதல் மூலம் ஆதாயம் தேடுகிறது என்பதை இந்திய இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்; பிரதமர் மோடி முதலில் வறுமை, விலை உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை பற்றி பேச வேண்டும். மணிப்பூர் பிரச்சினை பற்றி அவர் பேச வில்லை. மொத்த மாநிலமும் எரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்சினைகளிலிருந்து அவர் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வேலையை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் செய்தார்.

The post மக்களை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி: பொது சிவில் சட்டம் குறித்து கே.சி.வேணுகோபால் விமர்சனம்..! appeared first on Dinakaran.

Related Stories: