திருகுமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாக சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு மாநகராட்சி 2-வது மண்டலம் நெருப்பெரிச்சல் 5-வது வார்டு பகுதிகளிலுள்ள திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பில் 1 முதல் 8 வரை பிளாக்குகளில் 512 வீடுகளின் கட்டுமான பணிகள் முடித்து மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு மாநகரம் நெருபெரிச்சல் பகுதிகளிலுள்ள திருக்குமரன் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு தற்போது 1000-க்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர்.திருப்பூர் வடக்கு பகுதிகளிலுள்ள அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருக்குமரன் நகரிலுள்ள அடிக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக உள்ள சங்கங்களை சேர்ந்த நபர்களின் அடாவடி செயலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சங்க நிர்வாகத்தில் பல்வேறு மோசடிகள் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே திருக்குமரன் நகரிலுள்ள அடிக்குமாடி குடியிருப்பிலுள்ள சங்க நிர்வாகம் அடியோடு கலைக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சங்க நிர்வாகிகள் தேர்தலை உடனடியாக அடியோடு ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி உரிய அதிகாரிகளை நியமித்து வெளிப்படை தன்மையுடன் சங்க நிர்வாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருகுமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாக சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: