இந்தியாவின் 10 ஆண்டு கால ஐசிசி கோப்பை கனவு விரைவில் நிறைவேறும்: கிளைவ் லாயிட் பேட்டி

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிளைவ் லாயிட் அளித்துள்ள பேட்டி: “எங்களது காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பிரபலமாக இருந்தாலும், உண்மையான மதிப்பு எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது பல்வேறு டி20 லீக் வந்துவிட்டது. வீரர்கள் அதில் சிறப்பாக செயல்பட்டு தங்களது வாழ்விற்கு தேவையான நிறைய பணம் சம்பாதிக்கின்றனர். இது ஒரு அற்புதமான வாய்ப்பு. வீரர்கள் பணம் சம்பாதிப்பதில் எந்தவித தவறும் இல்லை. கால்பந்தில் பல முன்னணி வீரர்கள் கோடிகளில் சம்பாதிக்கின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதில் மட்டும் கேள்விகள் வருகிறது. ஆனால் எந்தவித தவறும் இல்லை. லீக் போட்டிகளில் விளையாடுவது சொந்த நாட்டிற்கு ஆபத்தாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அதாவது வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் 50 லட்சம் பேர் மட்டுமே மொத்தமாக இருக்கின்றனர். அதில் சிறந்த 20 வீரர்களை உருவாக்குகிறோம். பத்து பேர் மட்டுமே நாட்டிற்காக விளையாடுகின்றனர். மீதமுள்ள 10 வீரர்கள் வெளிநாடுகளில் உள்ள லீக் போட்டிகளில் மட்டும் விளையாடுவது சொந்த நாட்டிற்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் அடுத்த 10 வீரர்களை உருவாக்குவதற்குள் இந்த 10 வீரர்கள் மாறிவிடுவார்கள். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தால், வீரர்கள் பற்றாக்குறையில் கிரிக்கெட் இல்லாமல் போய்விடும்.

அது நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றார். மேலும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியாவின் 10 ஆண்டு கோப்பை வறட்சி விரைவில் முடிவுக்கு வரும். மீண்டும் உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதற்கான காலம் இது. ஐபிஎல் போட்டியால் எதிர்காலம் இந்தியாவுக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 50 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடுவீர்கள் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. அற்புதமான டெஸ்ட்டிலும் ஆதிக்கம் செலுத்துவீர்கள் என லாயிட் கூறினார்.

The post இந்தியாவின் 10 ஆண்டு கால ஐசிசி கோப்பை கனவு விரைவில் நிறைவேறும்: கிளைவ் லாயிட் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: