ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் சாய ஆலை அமைக்க எதிர்ப்பு: ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றின் கரையோரம் அமையும் தனியார் சாய அலைக்கு எதிராக 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த பவானி ஆற்றின் கரையோரத்தில் தனியார் சாய ஆலை அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொடிவேரி அணையை ஒட்டி இருக்கக்கூடிய பவானி ஆற்றின் கரையோரத்தில் தனியார் சாய ஆலை ஒன்று அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைய கூடிய ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைய இருக்கின்றது. இந்த ஆலை அமைந்தால் பவானி நதிநீர், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காலிங்கராயன் பாசன பகுதிகளும் பாதிக்கப்படும் என்பது விவசாயிகளின் எதிர்ப்புக்கு காரணமாக உள்ளது.

ஆலைக்கு வழங்கப்பட்டிருக்க கூடிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக இது போன்று நீர்நிலைய ஓரத்தில் அமைய கூடிய ரசாயன தொழிற்சாலையை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொடிவேரி, சத்தியமங்கலம் அணை பிரிவருகே 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றினைந்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை இருக்க கூடிய சாய, தோல் மற்றும் காகித ஆலைகளால் பவானி ஆற்று நீர் மாசடைகிறது என்ற பெரும் குற்றசாட்டு விவசாயிகள் மத்தியில் இருக்க கூடிய சூழலில் தற்போது கொடிவேரி அணை அருகில் ஆலை அமைவதால் குடிநீர் ஆதாரங்கள், விலை நிலங்கள் பாதிக்கபடும் என்ற குற்றசாட்டை முன்வைத்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் சாய ஆலை அமைக்க எதிர்ப்பு: ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: