இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவியின் மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் ” அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன் சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை, சம்மனை பெற செந்தில் பாலாஜி மறுத்தார், அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது செய்யபட்டதாக அமலக்கதுறை மனுவில் கூறபட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என அமலாக்கதுறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது பற்றி அவரது குடும்பத்திற்கு குறுஞ்செய்தி மின்னஞ்சல் மூல தெரிவிக்கப்பட்டது என்றும் அமலாக்கத்துறையினர் பதில் தெரிவித்துள்ளனர்.
The post அமைசர் செந்தில் பாலாஜியை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை; ஐகோர்டில் அமலக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.
