வேளாண் கல்லூரியில் திறமை திருவிழா

மதுரை, ஜூன் 25: மதுரை வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம், சமுதாய அறிவியல் கல்லூரி இணைந்து மாநில அளவில் வேளாண் கலைக்கல்லூரி மாணவர்களுக்கான திறமை திருவிழா போட்டியை நேற்று நடத்தியது. சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு வேளாண்மை கல்லுரி துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார். மதுரை வேளாண்மை கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்ற, சமுதாய கல்லூரி முதல்வர் காஞ்சனா சிறப்புரையாற்றினார். மாணவர் மன்ற ஆலோசகர் பாக்கியத்து சாலிகா வரவேற்றார்.

நாடக மன்ற செயலாளர் மனோஜ் திறமை திருவிழா குறித்து பேசினார். இதில் மலர் கம்பள மாதிரி உருவாக்கம், தனி நடிப்பு, கவிதை போட்டி, பென்சில் ஒவியம், ஒரு நிமிட போட்டி, ரங்கோலி, குறுநாடகம், கேலி விளம்பரம், கட்டுரைப்போட்டிகள், நவரச நாயகன், கவித்திடல், எதிரும் புதிரும், சொல் அம்புகள், நடன நிகழ்ச்சிகள், ஒவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ெதாடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் மன்ற ஆலோசகர் சாந்தி நன்றி கூறினார்.

The post வேளாண் கல்லூரியில் திறமை திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: