பருவ மழை ஏமாற்றியதால் சிறுவாணி அணை வறண்டது

கோவை, ஜூன் 25: கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் பாதாளத்தை தொட்டு விட்டது. இன்னும் 21 செ.மீ அளவிற்கு மட்டுமே குடிநீர் இருப்பில் இருக்கிறது. தினமும் 3.2 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இதே அளவிற்கு குடிநீர் எடுத்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. பருவ மழை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. நீர் மட்டம் பாதாளத்தை எட்டி வறண்ட நிலையில் சிறுவாணி குடிநீர் பிரிவினர் தவிப்படைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற சூழல் 3 முறை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அணையின் வறட்சி காலத்தில் மழை பெய்து காப்பாற்றி விடும்.

இப்போது வறண்ட நிலையில் சிறுவாணியை பார்த்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ அணையின் பழங்கால தடுப்பணையில் 2.5 மீட்டர் ஆழத்திற்கு நீர் இருப்பு உள்ளது. இந்த தடுப்பணை 3 ஆண்டிற்கு முன் கான்கிரீட் மூலமாக மூடப்பட்டது. இதில் உடைப்பு இருக்கிறது. இதில் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை 15 நாளுக்கு சமாளிப்பாக வழங்க முடியும். நீநேற்று நிலையத்தில் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சி பெற திட்டமிடப்பட்டுள்ளது. அணை வறண்ட போதும் 80 ஆண்டிற்கு முன் கட்டிய இந்த தடுப்பணை தான் மக்களை காப்பாற்ற போகிறது. இதற்கு பிறகும் மழை பெய்யாவிட்டால் வேறு வழியில்லை, ’’ என்றனர்.

The post பருவ மழை ஏமாற்றியதால் சிறுவாணி அணை வறண்டது appeared first on Dinakaran.

Related Stories: