ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை முதல் சுதர்சன யாகம்

 

ஈரோடு, ஜூன் 25: ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுதர்சன யாகம் நாளை (26ம் தேதி) முதல் விக்னேஸ்வர பூஜை துவங்குகிறது. தொடர்ந்து காயத்ரி மந்திரம், மாலாமந்திர ஜபமும், மாலை 5 மணிக்கு வேத பாராயணமும் நடக்கிறது, 27ம் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, 8.30 மணிக்கு சுதர்சன யாகம், மாலை 5 மணிக்கு சதுர்வேத பாராயணமும் நடக்கிறது.

வரும் 28ம் தேதி காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திருப்பல்லாண்டு, வேத பாராயணம், காலை 7 மணிக்கு சுதர்சன யாகம் பூர்த்தி, காலை 10 மணிக்கு கலச புறப்பாடு, காலை 11 மணிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு தேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஹோமம் நடக்கும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என கோயில் செயல் அலுவலர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

The post ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை முதல் சுதர்சன யாகம் appeared first on Dinakaran.

Related Stories: