சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை அமைச்சருடன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சந்திப்பு

சென்னை: இடைநிலை ஆசிரியர் சங்கங்கள், அரசு தேர்வுகள் இயக்கக சங்கங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும சங்கங்கள், நூலகர்கள் சங்கங்கள், தனியார் பள்ளிகள் சங்கங்கள் ஆகிய சங்கங்களை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நேற்று சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள்ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘‘நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனையும் சட்டத்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம். கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் மாநில கல்வி கொள்கைக்குழுவிடம் வழங்க இருக்கிறோம்’’ என்றார்.

The post சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை அமைச்சருடன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: