ஊழல் நிறைந்த பாஜ ஆட்சியை மாற்ற வரவேண்டும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர், அமைச்சர்கள், திமுக தொண்டர்கள் என அனைவரும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சிறப்பான ஆட்சி நடைபெறுவதால் பலரது கண்ணை உறுத்துகிறது. வட்ட செயலாளர் போதும். ஏவி விடப்படுகிற நாய் போன்று அமலாக்கத்துறை உள்ளது. யாரை வேண்டுமானாலும் கடித்து குதறும். செந்தில்பாலாஜி விவகாரத்தில் இன்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மனிதாபிமானம் இல்லாமல் ஒன்றியஅரசு நடந்து கொள்கிறது இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: பாஜ, முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து யுத்தத்தை துவங்கி உள்ளது. பிரதமராக ராகுல் வர வேண்டும். காங்கிரஸ் தலைமைக்கு வர வேண்டும் என பேசுபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால்தான் அவர் குறிவைக்கப்படுகிறார். தமிழக ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என இருந்து வருகிறார். மத்தியில் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு ஒரு மாற்றம் வரவேண்டும். அவர்களை நீக்க வேண்டும்.

The post ஊழல் நிறைந்த பாஜ ஆட்சியை மாற்ற வரவேண்டும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: