செய்யூர் வட்டாட்சியர் ஆபீசில் ஓய்வறை பயன்பாட்டுக்கு வருமா?

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் செய்யூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கிராம மக்கள், வீட்டு பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக வருகின்றனர். மேலும் பெயர் மாற்றம், முதியோர், விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வருகின்றனர். ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள கம்ப்யூட்டர் உள்பட சர்வர் பணிகளும் சரிவர நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக மக்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் இளைப்பாறும் அறை கட்டப்பட்டது. ஆனால் இன்றுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த கட்டிடமும் அதன் உள்ளே உள்ள மின் சாதன பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. இளைப்பாறும் அறை மூடியே கிடப்பதால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்கும் வயதானவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இளைப்பாறும் அறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post செய்யூர் வட்டாட்சியர் ஆபீசில் ஓய்வறை பயன்பாட்டுக்கு வருமா? appeared first on Dinakaran.

Related Stories: