அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து வழிபாடு: வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!

கரூர்: குளித்தலை அருகேயுள்ள வீரணம்பட்டியில் சாதிய விவகாரத்தால் சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோவிலின் சீல் அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின சமூக இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் பிரச்னை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலை அதிகாரிகள் தாற்காலிகமாக இழுத்து பூட்டினர். இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம் எனவும் அதுவரை கோயிலை தற்காலிகமாக பூட்டுவதாகவும் கூறி அதிகாரிகள் பூட்டு போட்டனர். இதையடுத்து கலெக்டர் பிரபுசங்கர் இரு தரப்பினர் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில் கலெக்டர் பிரபு சங்கர் காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினார். சீல் வைக்கப்பட்ட பூட்டை திறப்பதற்கு முறையான சாவி இல்லாததால் போலீசார் உதவியுடன் பூட்டை கடப்பாரை மற்றும் சுத்தியால் உடைத்து கோவிலுக்குள் சென்றனர். இந்நிலையில் இன்று வீரணம்பட்டி காளியம்மன் கோவிலை திறக்க கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் ஆகியோர் வருகை தந்தனர். காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை கலெக்டர் பிரபு சங்கர் அகற்றினார்.

சீல் வைக்கப்பட்ட பூட்டை திறப்பதற்கு முறையான சாவி இல்லாததால் போலீசார் உதவியுடன் பூட்டை கடப்பாரை மற்றும் சுத்தியால் உடைத்து கோவிலுக்குள் சென்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து வழிபட்டனர்.

The post அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து வழிபாடு: வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..! appeared first on Dinakaran.

Related Stories: