மாநிலங்களுக்கு அரிசி வழங்க மறுப்பது ஏன்? ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

புதுடெல்லி: வௌிச்சந்தையில் தானியங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவே பல மாநிலங்களுக்கு அரிசி வழங்க அரசு மறுத்துள்ளதாக ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனை செய்வதை ஒன்றிய அரசு அண்மையில் நிறுத்தி விட்டது. கர்நாடகாவில் அண்மையில் பதவி ஏற்ற காங்கிரஸ் அரசுக்கு அன்ன பாக்யா திட்டத்தின்கீழ் அரிசி வழங்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “வௌிச்சந்தையில் தானியங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மலிவு விலையில் மக்களுக்கு அரிசி கிடைப்பதை உறுதி செய்யவுமே பல மாநிலங்களுக்கு அரிசி வழங்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கு சேவையாற்ற மத்திய தொகுப்புகளில் அரிசி கையிருப்பில் வைக்கப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post மாநிலங்களுக்கு அரிசி வழங்க மறுப்பது ஏன்? ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: