காங்கிரஸ் சார்பில் எம்எல்சி ஆகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்: இன்று மனுதாக்கல் செய்கிறார்

பெங்களூரு: கர்நாடக சட்டமேலவையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட மூன்று பேர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்களான ஆர். சங்கர், லட்சுமண் சவதி மற்றும் பாபுராவ் சிஞ்சசூரு ஆகிய மூன்று பேர் தங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மூன்று இடங்களுக்கான இடைத்தேர்ல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அமைச்சர் போஸ்ராஜ் மற்றும் திப்பனப்பா காமக்னூரு ஆகியோர் மேலவை உறுப்பினர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், கடந்த சட்ட சபை தேர்தலில் பாஜவில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் காங்கிரசில் இணைந்தார். தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிக்கெட் வழங்கப்பட்டாலும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. தற்போது ஹூப்பள்ளி- தார்வார் மேலவை தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலவையில் காலியாக இருக்கிற மூன்று இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். எனவே, இன்று காலை 11 மணி அளவில் ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்ட மூவரும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

The post காங்கிரஸ் சார்பில் எம்எல்சி ஆகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்: இன்று மனுதாக்கல் செய்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: