சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் அகற்றம்!: போக்குவரத்து சீரானது.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் அகற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது. சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சுரங்கப் பாதையில் மழைநீர் இந்த முறை தேங்கவில்லை என்றாலும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டன. சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை.

அங்கு சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. கணேசபுரம் கரங்கப்பாதையில் மழைநீரை அகற்ற வழக்கமாக ஓரிரு நாட்கள் ஆகும் நிலையில் இன்று ஓரிரு மணி நேரத்தில் அகற்றப்பட்டது. கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரும் வெளியேற்றப்பட்டது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை: எந்த சுரங்கப் பாதையிலும் நீர் தேங்கவில்லை

கணேசபுரம் சுரங்கப் பாதையில் நீர் அகற்றப்பட்டதை அடுத்து தற்போது எந்த சுரங்கப் பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை.

அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீரானது:

சென்னையில் 22 சுரங்கப் பாதைகளிலும் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. சென்னையில் அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீரானதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் அகற்றம்!: போக்குவரத்து சீரானது.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: