பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள 3.84 லட்சம் வேலைகளை மோடி பறித்து விட்டார்: காங். கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை மோடி தலைமையிலான பாஜ அரசு நம்பவில்லை. நாட்டிலுள்ள ஏழு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 3.84 லட்சம் வேலைவாய்ப்புகளை மோடி பறித்து விட்டார். ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு 42 சதவீதம் குறைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை அழித்து லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்புகளை மோடி அரசு பறித்து விட்டது. வெறும் பிரசாரத்திற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், 2013 முதல் 2022ம் ஆண்டு வரையில் பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட வேலை இழப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய காட்சித் தொகுப்பையும் கார்கே பகிர்ந்துள்ளார்.

The post பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள 3.84 லட்சம் வேலைகளை மோடி பறித்து விட்டார்: காங். கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: