மற்றவர்களுக்கு வழிவிட தயார் எம்பி தேர்தலில் போட்டியிட இன்னும் முடிவெடுக்கவில்லை: கர்நாடக துணைமுதல்வர் சகோதரர் தகவல்

ராம்நகரம்: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ். காங்கிரஸ் எம்பி. அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தகுதியான வேட்பாளர்களுக்கு வழிவிடுவதற்கு தயாராக இருக்கிறேன். தற்போது அரசியல் அந்தளவுக்கு சிறப்பாக இல்லை. அரசியல் போதும் என்று தோன்றுகிறது. அதிகாரத்து்க்கு அரசியல் செய்ய விரும்புகிறார்கள். நான் மாநில வளர்ச்சிக்காக பணியாற்ற வந்தேன். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்குள் முடிந்தவரை தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன். அதன்பிறகு பார்க்கலாம். அடுத்த தேர்தலில் போட்டி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. மஜத, பாஜ வேட்பாளர்கள் யார் நின்றாலும் மக்கள் தான் முடிவு எடுக்கப்போகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் நான் தான். அடுத்த தேர்தலில் 20 இடங்களை பிடிக்க காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது’ என்றார்.

The post மற்றவர்களுக்கு வழிவிட தயார் எம்பி தேர்தலில் போட்டியிட இன்னும் முடிவெடுக்கவில்லை: கர்நாடக துணைமுதல்வர் சகோதரர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: