ஸ்கேட்டிங் பாட்டீஸ்!

ஏஐ (AI) உருவாக்கிய ஸ்கேட்டிங் பாட்டீஸ் புகைப்படங்கள்தான் சமீபத்திய வைரல் கலாட்டாக்கள். மும்பையைச் சேர்ந்த டிஜிட்டர் ஆர்டிஸ்ட் ஆஷிஷ் ஜோஸ் சமீபத்தில் சில வயதான பெண்கள் ஸ்கேட்டிங்கில் வேகமாக செல்வது போல் புகைப் படங்களை உருவாக்கி இணையத்தைக் கலக்கினார். அந்தப் புகைப்படங்கள் வெளியான கணம் பலரும் உண்மை என நம்பி ஹார்டின்களைப் பறக்கவிட்டு, பாராட்டுகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அது போலிப் புகைப்படம் என்று தெரிந்தவுடன் பலருக்கும் ஏமாற்றம். ஆனாலும் இந்தப் புகைப்படம் சட்டென மனதுக்கு உற்சாகத்தைக் கொடுத்து நம்மையும் உந்தும் சக்தியாக இருப்பதாகவே பலரும் சொல்லும் நிலையில் இந்தப் புகைப்படம்தான் எங்கும் எதிலும் டிரெண்டிங்.

அழும் தாய்க்கு தைரியம் சொல்லும் குழந்தை!

எத்தனை வயதானாலும் திங்கட் கிழமை என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல யாருக்கும் ஒரு சலிப்பு உண்டாகும். ஓரிரு நாட்கள் வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் செல்லும்போது நிச்சயம் செல்ல வேண்டுமா? என்னும் எண்ணம் உண்டாகும். இப்படித்தான் இன்ஸ்டா புகழ் குழந்தை 2 வயது யுவி பரத்வாஜ் வேலைக்குச் செல்லாமல் பொய்யாக அழும் தன் அன்னை அனுப்பிரியாவை தேற்றி அலுவலகம் போகச் சொல்கிறார். பொய்யாக அழும் அன்னை, தேற்றும் குழந்தை என இந்த அம்மா- மகன் படு ஃபேமஸாகிக் கொண்டிருக்கிறார்கள். யுவி 3 மாதக் குழந்தையாக இருக்கும் தறுவாயிலிருந்து அவரது அம்மாவும், அப்பாவும் யுவி செய்யும் அத்தனை குறும்புகளையும் வீடியோக்களாகப் பதிவிட்டு வருகிறார்கள். இப்போது இன்னும் அதீத ஃபேமஸாகியிருக்கிறது இந்த வீடியோ.

 

The post ஸ்கேட்டிங் பாட்டீஸ்! appeared first on Dinakaran.

Related Stories: