விஜயாபுரத்தில் சண்முகா கார்டன்ஸ் வீட்டுமனை விற்பனை துவக்க விழா

 

திருப்பூர், ஜூன் 16:திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய டிடிசிபி அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் மிகக்குறைந்த விலையில் சண்முகா கார்டன்ஸ் வில்லா என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனை விற்பனைக்கான தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது. ஜெயசித்ரா சண்முகம், கொங்கு முருகேசன், பிர்லி கந்தசாமி, பிர்லி துரைசாமி, லீட்ஸ் நடராஜன், ஜெயசித்ரா மணி ஆகியோர் வரவேற்றனர். இதில் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னதாக கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் வீட்டுமனை விற்பனை தொடங்கியது.

வீட்டுமனைகள் குறித்து பங்குதாரர்கள் கூறியதாவது, திருப்பூர் மாநகரின் மிக அருகில் அமைக்கப்பட்டுள்ள சண்முகா கார்டன்ஸ் வில்லாவில் குடிநீர், மின்சாரம், 40, 33, 23 அடி தார்சாலை, வடிகால், மேல்நிலைத் தொட்டி, சோலார் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உள்ளன. கண்காணிப்பு கேமரா, காவலாளிகள் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம் பெற்றுள்ளது. மேலும், சிறுவர்கள், குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் தனிப்பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நவீன உபகரணங்கள் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

பூங்காவைச் சுற்றிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனைகள் வாஸ்து முறைப்படி பிரிக்கப்பட்டு, அனைத்து மனைகளுக்கும் தனித்தனி உட்பிரிவு (சப்-டிவிஷன்) செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனைகள் 4 சென்ட் முதல் 15 சென்ட் வரை பிரிக்கப்பட்டு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் விஜயாபுரம் பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரில் உள்ள சண்முகா கார்டன்ஸ் வில்லா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விழாவில் 3வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் எம்.ராஜாமணி, வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராமசாமி, திமுக 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் கொ.ராமதாஸ், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாகராஜ், செந்தூர்முத்து, ஜெய் சுதா பூபதி, தொழிலதிபர்கள் பத்மநாதன், சீகல் பி.ஏ.பழனிச்சாமி, எஸ்.எஸ்.ஹோட்டல்ஸ் முருகானந்தம் உள்பட தொழிலதிபர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post விஜயாபுரத்தில் சண்முகா கார்டன்ஸ் வீட்டுமனை விற்பனை துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: