இதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது;ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். பாஜ, ஆர்எஸ்எஸ் போன்றவை வருவதற்கு முன் ஜனசங்கம் இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் ஜனசங்கத்தை கலைத்துவிட்டு ஓடிவிட்டனர். ஆனால், எமர்ஜென்சியிலும் போராடி வென்ற ஒரே கட்சி திமுகதான். இதுபோன்ற வரலாறுகள் தெரியாமல் அமித்ஷா பேசி வருகிறார்.இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் திருநீர்மலை ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.பாஸ்கர், ஆர்.டி.பூபாலன், சதீஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ். மாவட்ட பிரதிநிதிகள் ரமணா, லியோ பிரபாகர், வெள்ளைச்சாமி, மதிவாணன், வட்ட செயலாளர்கள் ஜே.ஏசுதாஸ், கே.பி.முரளிகிருஷ்ணன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், சீனிவாசன், கருணாநிதி, மணப்பாக்கம் ரவி, கவுன்சிலர்கள் செல்வேந்திரன், அமுதப்பிரியா செல்வராஜ், கேபிள் டிவி ராஜா, விஜய்பாபு, மணிகண்டன், சந்திரசேகர், சதீஷ், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நங்கநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம்; திமுகவின் வரலாறு தெரியாமல் அமித்ஷா பேசுகிறார்: டி.ஆர்.பாலு எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
