ரத்த தான முகாம் விழிப்புணர்வு பேரணி

 

கோவை, ஜூன் 15: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை இணைந்து உலக ரத்த தான தினத்தையொட்டி மாபெரும் ரத்ததான முகாமை நேற்று நடத்தியது. பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் அருங்காட்சியகம் அருகேயுள்ள பல்கலைக்கழக தேர்வு கூடம் முன்பு நடந்த முகாமை இஎஸ்ஐ டீன் ரவீந்திரன், பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.

தொடர்ந்து ரத்த தானம் குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், ரத்த தானம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை பல்கலைக்கழக வேளாண்மை முதன்மையர் வெங்கடேச பழனிச்சாமி மற்றும் செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

The post ரத்த தான முகாம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: