முத்துப்பேட்டையில் தாழ்வாக தொங்கிய ரயில்வே கேட் சீரமைப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் 100 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற தர்கா மற்றும் பிரசித்திபெற்ற தில்லைராமர் கோயில், உள்ளிட்ட கோயில்கள் உட்பட பல்வேறு வழிப்பாட்டு தளங்கள், லகூன் மற்றும் அலையாத்திகாடுகள் உட்பட சுற்றுலா தளங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும். இந்நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று பணிகள் முடிந்து, சென்ற ஆண்டு முதல் திருவாரூர் காரைக்குடி ரயில் மற்றும் தொலைதூர ரயில்களும் சென்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்பகுதியில் அதிகளவில் ரயில் போக்குவரத்து உள்ளது. இதனால் இந்த ரயில்வே கேட் பகுதியில் ரயில் வரும் நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக சமீபகாலமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடக்கிறது. அதற்காக கேட்டை திறந்து மூடும் கேட் கீப்பர் பொறுப்பின்றி திறக்கும் கேட்டை உயர்த்தி நிறுத்தாமல் தாழ்வாக நிறுத்தி வருகிறார். இதனால் ஆபத்துகள் ஏற்படலாம் என அப்பகுதி மக்கள், பாதுகாப்பு கருதி கேட் கீப்பரிடம் புகார் தெரிவித்தால் போதிய நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் சரக்கு ரயில் ஒன்று சென்றபோது, இந்த ரயில்வே கேட் மூட்டப்பட்டது. அப்போது ரயில் போனதும் கேட் கீப்பர் ரயில் கேட்டை திறந்தார். கேட்டு மேல்நோக்கி சென்றபோது, வாகனங்களும் கடந்து சென்றது. திடீரென்று மேல்நோக்கி சென்ற கேட் கீழே இறங்கி தாழ்வாக நின்றது. இதனால் அப்பகுதியை கடக்க இருந்த அரசு பேருந்து கேட்டின் மீது மோத போனது டிரைவரின் சமார்த்தியதால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

எனவே விபத்துக்கள் நடக்கும் முன் இப்பகுதி ரயில்வே கேட்டை சீரமைத்து தாழ்வாக நிறுத்துவதை தவிர்த்து உயர்த்தி நிறுத்த முன் வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டி கடந்த 11.6.2023ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேற்று வந்த பணியாளர்கள் காலை முதல் மதியம் வரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், ரயில்வே துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post முத்துப்பேட்டையில் தாழ்வாக தொங்கிய ரயில்வே கேட் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: